கசந்த்சாகீஸ் ஒரு மறுப்புவாதி தற்கணத்தின் மகிழ்ச்சியை மட்டுமே அவர் ஏற்கிறார். அந்த மகிழ்ச்சியை விடுதலையடைவதன் வழியாக மட்டுமே மனிதர்கள் அனுபவிக்க முடியும் என்பது அவரது வாதம். எவற்றிலிருந்து விடுதலை? எல்லாவற்றிலிருந்தும். அதன் வாய்ப்புகளை ஆராய்வதற்காக உணர்ச்சிகர நிகழ்வுகளை விலக்கி முழுக்க முழுக்கச் சிந்தனைக் குவியல்களின் தொகுப்பாகப் புனையப்பட்டுள்ளது இந்நாவல். இதில் சிந்தனை என்பது நிலைத்தன்மையுடையதாக (static) அல்லாமல் நடன அசைவுகள் கொண்ட செயலூக்கமாக முன்வைக்கப்படுகிறது. நமது முன்முடிவுகளையும் செக்கு மாட்டு வாழ்க்கையையும் மறுபரிசீலனை செய்ய வற்புறுத்துகிறது. கசந்த்சாகீஸின் புகழ்பெற்ற இந்நாவல் குறித்த பேச்சு இலக்கிய உலகில் எப்போதும் இருக்கிறது.
5 Must read book
Pavithran 22-07-2024 05:17 pm