அகதி முகாம்கள் உட்பட இன்று உலகளாவி பரந்து கிடக்கிறது தமிழ்ச் சமூகம். அதற்கும், ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் அளிக்கப்பட்ட கொடையே ஸீரோ டிகிரி. ஆனால் இந்நாவலைப் பங்களிப்பென ஏற்பதோ சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தும் கழிவுப் பொருளாக ஒதுக்கித் தள்ளுவதோ சமூகத்தின் பிரச்னையே தவிர என்னுடையது அல்ல. என் மூலமாக இக்காரியம் நடந்திருப்பதென்பது ஒரு தற்செயல் நிகழ்வு மட்டுமே. இதில் நான் ஒரு கருவியாகச் செயல்பட்டிருக்கிறேன் என்று சிறு உவகை மட்டுமே என்னளவில் மிஞ்சக் கூடியது. ஸீரோ டிகிரி நாவலின் முதல் பதிப்பு வெளிவந்தபோது சில ‘பொதுநல விரும்பிகள்’ இதைத் தடை செய்ய வேண்டுமென தவளைச் சத்தம் எழுப்பினார்கள். அந்த வேளையில் அன்பான சில உள்ளங்கள் எனக்கு அளித்த தார்மீக ஆதரவும் அன்பும் என்னால் மறக்க இயலாதது. ஸீரோ டிகிரி ஒரு Lipogrammatic நாவல். சர்வதேச அளவிலேயே ஒன்றிரண்டு நாவல்கள் மட்டுமே இந்த முறையில் எழுதப்பட்டுள்ளன. ஒரு நாவலில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வார்த்தைகளைத் தவிர்த்து விட்டு எழுதுவது லிப்போக்ராமடிக் எழுத்து. ஸீரோ டிகிரியில் ஒரே ஒரு அத்தியாயத்தைத் தவிர வேறு எந்த இடத்திலும் ‘ஒரு’ ‘ஒன்று’ என்ற இரண்டு வார்த்தைகளும், கமா, கேள்விக்குறி போன்ற நிறுத்தற்குறிகளும் பயன்படுத்தப்படவில்லை.
- சாரு நிவேதிதா
Be the first to rate this book.