திரைப்படத் துறையில் நேரடியாக பயிற்சியில்லாதவர்களுக்கு, சினிமாத் துறை எப்படி இயங்குகிறது, அதன் தயாரிப்பு நிர்வாகம் எம்முறைகளில் செயல்படுகிறது என்ற குழப்பம் இருக்கும். அடுத்து, குறைந்த பட்ஜெட்டை, அதுவும் தன்னுடைய சொந்த முதலீடாக உள்வைத்து படமெடுக்கையில், ஏற்கனவே போதிய திரைப்படத் துறை அனுபவமும் இல்லாதிருக்கும்பொழுது அவர்களுக்கான ஒரு கையேடாக இந்நூல் விளங்குகிறது.
இந்தப் புத்தகத்தில் தயாரிப்பின்போது Pre-Production, Production, Post-Production என எந்தெந்தப் பிரிவுகளில் ஒரு இயக்குனர் எவ்விதமான உழைப்புகளைக் கொடுக்க வேண்டும், தன் குழுவை எப்படி கட்டமைத்துக்கொள்ள வேண்டும், என விளக்கப்பட்டுள்ளது. பின்னர் ஒவ்வொரு பக்கமும், ஒவ்வொரு உலக சினிமா இயக்குனரது "மேற்கோள்” என உங்களுக்கு வழிகாட்டி, இந்நூல்.
5 Zero
Praveenkumar 19-11-2022 06:02 pm