ராபர்ட் மேனார்ட் பிர்சிக், மினஸோட்டாவில் உள்ள மினியபோலிஸில் 1928ல் பிறந்தவர். இவர் ஓர் எழுத்தாளர், மற்றும் தத்துவவாதி. ஒன்பது வயதில் இவருடைய ஐ.க்யூ. 170ஆக இருந்ததாலிவர் பல வகுப்புகள் படிக்காமல் 1943ல் உயர்நிலைக்கல்வி பட்டயம் பெற்றார். இந்தியாவில் உள்ள ப்னாரஸ் இந்துப் பல்கலைக் கழகத்தில் கிழக்கத்திய தத்துவம் மற்றும் பண்பாடு பற்றி படிக்க வந்தவர் பட்டம் பெறாமலேயே இந்தியாவை விட்டுச் சென்றார். அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்றினார். 1974ஆம் ஆண்டு இவருடைய முதல் புத்தகமான ‘ஜென்னும் மோட்டார் சைக்கிள் பராமரிப்புக் கலையும் – பண்புகள் பற்றிய விசாரணை’ வெளியானது. இன்று வரை பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பல லட்சம் பிரதிகள் விற்பனையாகி இருக்கின்றன.
5 Ok
Nice
Senthil 05-04-2022 02:36 am