அமெரிக்கரான பால் ரெப்ஸ், சர்வதேச அளவில் புகழ்பெற்ற புத்த ஞானி நியோஜென் சென்ஸகி ஆகியோரால் தொகுக்கப்பட்ட படைப்புகளின் தமிழாக்கமாக இந்நூல் வெளிவந்திருக்கிறது.
மூல படைப்பில் உள்ள கருத்துகளைச் சேதமின்றி தமிழில் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நூல் வடிவமைக்கப்பட்டுள்ளதை உணர முடிகிறது. நம் சிந்தனையைத் தூண்டும் வகையிலான உரையாடல்கள், நகைச்சுவை சம்பவங்கள், அனுபவ வழிகாட்டுதல்கள் 101 ஜென் கதைகளில் இடம்பெற்றுள்ளன.
மறுபிறப்பு, விழிப்புணர்வு, ஞானம் போன்றவற்றில் தீவிர ஈடுபாடு கொண்ட ஜென் தத்துவ ஞானிகளின் கோவான் எனப்படும் உரையாடல்கள் "வாசலற்ற வாசல்' பகுதியில் இடம்பெற்றுள்ளன.
12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சீன குருவான காகுவான், அவருக்கு முன்பிருந்த தாவோயிசத் தத்துவத்தை, காளைகளை அடிப்படையாக வைத்து விளக்கப்படுகிறது. வாழ்வின் நித்திய கோட்பாடு, செயல்படும் உண்மை, ஒருவரின் உண்மையான இயல்பை உணர்தலில் உள்ள அடுத்தடுத்த படிகளை 10 காளைகள் என்ற விளக்கவுரை அளிக்கிறது.
ஜென் தத்துவத்தை அறிந்து கொள்ள விரும்பும் அனைவருக்கும் பயன்படும் நூல்.
Be the first to rate this book.