நாம் நம்மைத் தனியனாக்கிக் கொள்ளும்போது கிடைக்கும் காட்சிகள், ஓசைகள், மனஅவசம் இவற்றின் விகிதசேர்மானம் ஆழமான அனுபவமாக இருக்கும்; இருந்தால் புரிதல் என்ற கேள்வியோ, தெரிந்து தெளிதலோ தேவையற்றுப் போகிறது-அனைத்தும்: புத்தம் புதிதாகிக் கொண்டே வரும் இனம் புரியாத வாசத்தோடு Ôஐயபயம்Õ நீக்கி. எட்டுவகை மானுட மெய்ப்பாடு, வலுமிக்க கிராமத்து ஆன்மா, புவியின் சமிக்ஞையை உடல் உணர்தல், அறிவின் பேரெல்லை விழைவு இவை பிரம்மராஜனின் கவிதைகளில் உள் சரடு- இந்தப் பின்புலத்தோடு பிரம்மராஜன் கையிருக்கதிருந்து தன்னை விடுத்துக் கொண்ட ஜென்மயில். இது அவரது மிக சமீபத்திய கவிதைத் தொகுதி.
- பழனிவேள்
Be the first to rate this book.