ஆதிமூல ஜென் கதைகளுக்கும் இந்தக் கதைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தப்பித்தவறி இக்கதைகளில் ஒன்றோ, ஒரு சிலவோ ஜென்னாகவே இருந்துவிடுமானால் அது தற்செயலே.
5 புத்தியைக் கூர்தீட்டும் உரைகற்கள் இந்த ஜென் கதைகள்
ஜென் கதைகள் என்றாலே, பண்டைய காலத்துப் பழுப்புநிற சீன/ஜப்பானிய தேசங்கள்தான் நமக்கு நினைவில் வருகின்றன.
ஆனால் ஜென் என்பது ஒரு உலகப்பொதுத்தத்துவம். அது கால, தேச, வர்த்தமானங்கள் கடந்தது. இதனடிப்படையில், பாராவின் ஜென் கதைக்கான களங்கள் நவீனயுக உலகியலையும், நாசகார நிகழ்வுகள்/நாசகார மனிதர்களையும் உள்ளடக்கியுள்ளது. நாம் வாழும் காலமும் நாம் பார்க்கும் மனிதர்களும் நாம் சந்திக்கும் நிகழ்காலச் சிக்கல்களும் கூட அவரது ஜென் கதைகளில் இடம் பெற்றுள்ளன.
வெளிப்பார்வைக்குக் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க வைத்தாலும், இந்த ஜென் கதைகள் ஆழமான அர்த்தங்கள் கொண்டவையாக, வாழ்வின் பெரும் உண்மைகளை அலசுவதாக உள்ளன.
ஜென் என்னும் தத்துவப் பூரணத்தை, நகைச்சுவையும் உலகியலும் கலந்து பிசைந்து, சீன/ஜப்பானிய வாசனை திரவங்களைத் தெளித்த அரிசி மாவினுள் ஒளித்து செய்த மோதகமாகப் பரிமாறியுள்ளார் பாரா.
-- வ. ரமணன்
5 புத்தியைக் கூர்தீட்டும் உரைகற்கள் இந்த ஜென் கதைகள்
ஜென் கதைகள் என்றாலே, பண்டைய காலத்துப் பழுப்புநிற சீன/ஜப்பானிய தேசங்கள்தான் நமக்கு நினைவில் வருகின்றன. ஆனால் ஜென் என்பது ஒரு உலகப்பொதுத்தத்துவம். அது கால, தேச, வர்த்தமானங்கள் கடந்தது. இதனடிப்படையில், பாராவின் ஜென் கதைக்கான களங்கள் நவீனயுக உலகியலையும், நாசகார நிகழ்வுகள்/நாசகார மனிதர்களையும் உள்ளடக்கியுள்ளது. நாம் வாழும் காலமும் நாம் பார்க்கும் மனிதர்களும் நாம் சந்திக்கும் நிகழ்காலச் சிக்கல்களும் கூட அவரது ஜென் கதைகளில் இடம் பெற்றுள்ளன. வெளிப்பார்வைக்குக் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க வைத்தாலும், இந்த ஜென் கதைகள் ஆழமான அர்த்தங்கள் கொண்டவையாக, வாழ்வின் பெரும் உண்மைகளை அலசுவதாக உள்ளன. ஜென் என்னும் தத்துவப் பூரணத்தை, நகைச்சுவையும் உலகியலும் கலந்து பிசைந்து, சீன/ஜப்பானிய வாசனை திரவங்களைத் தெளித்த அரிசி மாவினுள் ஒளித்து செய்த மோதகமாகப் பரிமாறியுள்ளார் பாரா. -- வ. ரமணன்
Ramanan 06-09-2024 05:10 pm