இங்கிலாந்தில் வெளியான இந்நூலின் பதிப்பை பிரிட்டிஷ் அரசாங்கத்தார் பறிமுதல் செய்ததுடன் பிரிட்டிஷ் இந்தியாவிற்குள் இந்நூல் வரக்கூடாதென்று தடையுத்தரவு விதித்தார்கள். பெரும் கிளர்ச்சிக்குப் பின்னர் 1926-ஆம் ஆண்டில் தான் இத்தடையுத்தரவு நீக்கப்பட்டது.
வரலாற்றுப் பெருமைமிக்க இந்தியாவை வெளிநாட்டவர்களுக்குத் தகுந்த சான்றுகளுடன் லாலாஜி அடையாளப்படுத்துகிறார். ‘நூன்முகம்’ என்ற பகுதியில் இந்தியாவின் தொன்மையான வரலாற்றுச் சிறப்புகளைப் பகுப்பாய்வு முறையில் விவரிக்கிறார். இதுவரை பலராலும் அறியப்படாத செய்திகளை அவர் வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறார். கிரேக்க, ரோமானிய நாகரிகங்களை விடவும் சிறப்பு மிகுந்தது இந்திய நாகரிகம் என்பதை அதன் அரசியல், பொருளாதார அறிவியல் கலை, கலாச்சாரப் பண்பாட்டு வாழ்க்கை வளர்ச்சி நிலைமைகளிலிருந்து சரியான தரவுகளுடன் லாலாஜி விளக்குவது அவரது ஆழ்ந்த ஈடுபாட்டைப் புலப்படுத்துகிறது. கிழக்கையும், மேற்கையும் அவைகளின் அடிப்படையிலேயே ஆய்வு செய்து மதிப்பீடுகளை நிறுவுகிறார்.
Be the first to rate this book.