உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பை ஆவணப்படுத்தும் மிக முக்கியமான புத்தகம் இது.
உக்ரைனை இரண்டு நாள்களில் கைப்பற்றிவிட நினைத்தது ரஷ்யா. இரண்டு வருடங்களாகியும் யுத்தம் தொடர்கிறது. இதன் பின்னணியில் இயங்கும் அரசியல், பொருளாதார, ராணுவக் காரணங்களை மிகத் தெளிவாக விவரிக்கிறது இந்நூல். மட்டுமல்லாமல், போர்க்களமாகியிருக்கும் உக்ரைனில் மக்கள் படும் அவலங்களையும் அதைப் பொருட்படுத்தாமல் எதிர்கொண்டு வெல்லத் துடிக்கும் அவர்களது வேட்கையையும் வேர் வரை. ஆராய்கிறது நவீன உலகில் இனி எங்கே போர் நடந்தாலும் அதன் பின்னணி என்னவாக இருக்கும் என்று துல்லியமாகப் புரிந்துகொள்ள உதவும் நூல் இது.
நூலாசிரியர் வினுலா, தொழில் முறை மென்பொருளாளர். மெட்ராஸ் பேப்பர் இணைய வார இதழில் தொடர்ந்து சர்வதேச அரசியல் கட்டுரைகள் எழுதி வருகிறார்.
Be the first to rate this book.