காலமாற்றத்தைப் பதிவு செய்கிற நாவலாக இந்நூல் அமைகிறது. இதே போன்ற விவசாயக்குடும்பத்தில் பிறந்த ஜெயந்தின் இணையர் சுமதி தான் தன் பாட்டி, அம்மாக்களைப்போல ஒரு ‘சமைத்துப்போடும் மனைவியாக வாழ்ந்து முடிந்துபோகக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாள். நாவல் முழுக்க அவள் தனக்கான அடையாளத்தைத் தேடுபவளாகவும், ஜெயந்த் அவளுடைய கனவுகளுக்கு ஆதரவாக நிற்பவனாகவும் படைத்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. சுமதியைப் படிக்க வைக்க பாட்டி நடத்தும் போ ராட்டம் மனம் கொள்ளத்தக்கதாக விரிகிறது. நாவலின் சுருக்கமான அளவு இப்பெண்களின் மன உலகத்தை விரிவாகப் பேச இடம் தராமல்போனது ஏமாற்றமே.
போர்க்களத்தில் காயப்பட்டு மருத்துவ சிகிச்சையில் எல்லையில் இருக்கும் ஜெயந்த்தை கவனித்துக்கொள்ள சுமதியும் குழந்தை வசந்த்தும் சென்று இணையும் காட்சிகள் நாவலில் நம்மை நெகிழவைக்கும் பகுதியாகும்.
Be the first to rate this book.