“இந்தப் புத்தகம் சில வித்தியாசமான கேள்விகளை முன்வைக்கிறது. மிகப்பெரிய பிரளயங்கள் பற்றி முற்காலத்தில் ஏற்பட்ட புராணங்களில் கூறப்பட்டிருப்பவை உண்மையா? இந்தியர்கள் தங்கள் நாட்டை ‘பாரதம்‘ என்று ஏன் அழைக்கிறார்கள்? இரும்புக்காலத்தில் வாழ்ந்த இந்தியர்கள் தங்கள் நாட்டின் நில அமைப்பைப் பற்றி எப்படிப் புரிந்துகொண்டார்கள்? அவர்களின் புரிதல் பற்றி இதிகாசங்கள் நமக்கு என்ன கூறுகின்றன? காசிக்கு வெளியே காணப்படும் ‘சார்நாத்’ என்ற இடத்தில் தன் முதல் பிரசங்கத்தை பகவான் புத்தர் ஆற்றியதற்குக் காரணம் என்ன? ஒரு வணிகக் கப்பலின் இந்தியப் பெருங்கடல் பயணம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் எப்படி இருந்திருக்கும்? அல்லது குப்தர்கள் காலத்தில், பாடலிபுத்திரத்தில் சுகஜீவியான ஒருவனின் வாழ்க்கை எவ்வாறு இருந்திருக்கும்? முகலாயர்கள் சிங்கங்களை எவ்வாறு வேட்டையாடினார்கள்? ஐரோப்பியர்கள் இந்தியாவின் வரை படத்தை எவ்வாறு தயாரித்தார்கள்? இந்தியத் துணைக் கண்டத்தின் குறுக்கும் நெடுக்கும் பிரிட்டிஷ்காரர்கள் எவ்வாறு இருப்புப் பாதைகளை அமைத்தார்கள்?” இப்படி எண்ணற்ற கேள்விகள். விடையாக விரிகிறது இந்நூல்.
Be the first to rate this book.