தீபாவளித் திருநாளான 1944 அக்டோபர் 16_ம் தேதி, தமிழ்த் திரையுலக வரலாற்றில் ஒளி வீசிய ஒரு மாபெரும் சாதனையின் தொடக்க நாள். ஆம்! அன்றுதான் ‘ஹரிதாஸ்’ திரைப்படம் வெளியானது. தொடர்ந்து 110 வாரங்கள் ஓடியது. அதாவது, 80 வருடகால தமிழ்த் திரையுலகில் மூன்று தீபாவளிகளைக் கண்ட ஒரே படம் இதுதான்! மயில்கண் சரிகை வேஷ்டி, சில்க் சட்டை, ஜவ்வாது மணம், பளபளக்கும் சரீரத்துடன், அனைவரையும் வியக்க வைக்கும் சாரீரத்தையும் பெற்றிருந்த எம்.கே.தியாகராஜ பாகவதர்தான் அந்தச் சாதனையின் கதாநாயகன். நாடகத் துறையின் மூலம் திரைத் துறையில் நுழைந்து, கந்தர்வ கானத்தால் மக்கள் மனதை வென்று ‘ஏழிசை மன்னர்’ என்ற பட்டம் பெற்ற எம்.கே.டி.பாகவதரின் வாழ்க்கைக் கதையை, சுவையோடு பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர் மாலதி பாலன்.
Be the first to rate this book.