பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்து, கேடு கெட்ட மானிடரே! கேளுங்கள்: கூடு விட்டு இங்கு ஆவிதான் போயின பின்பு, யாரே அனுபவிப்பார், பாவிகாள்! அந்தப் பணம்?
வேதாளம் சேருமே; வெள் எருக்குப் பூக்குமே; பாதாள மூலி படருமே; மூதேவி சென்று இருந்து வாழ்வளே; சேடன் குடிபுகுமே; - மன்று ஓரம் சொன்னார் மனை.
மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம், உயர்ச்சி, தாளாண்மை, தேனின் கசிவந்த செல்லியர்மேல் காமுறுதல், - பத்தும் பசி வந்திடப்போம் பறந்து.
- ஔவையார்
Be the first to rate this book.