ஆதி வேளாண் நில மனிதரின் மூர்க்கம் உறைந்திருக்கும் இக் கவிதைகள், தான் கடந்து வந்த நீண்ட பருவ காலங்களின் உளவியல் கதைகளை முதிர்ச்சியான நிலையில் எழுதிப் பார்த்திருக்கின்றன. நமது வாழ்வெனும் சட்டகத்தில் தாவர, விலங்குணர்ச்சிகளின் இயல்பு நிலைகளை அதிகரித்துக் காட்டும் இத் தன்மை தமிழ் வாழ்வின் தொன்மையை நவீனமாக மட்டுமல்ல நம்மெல்லோரின் உள்ளிருக்கும் இழந்துபோன வேளாண் நினைவுகளையும், அதன் காமங்களையும் மீட்டுருவாக்கம் செய்வதாகவும் சொல்லலாம். பழங்குடிகளுக்கும் நிலவுடைமைச் சமூகத்திற்கும் இடையே பழைய உற்பத்தி உறவுகளின் தோற்றுவாய்கள் குறித்து இன்றைய சமுதாயத்தில் விகர்ப்பமின்றிப் பேசும் இது ஒரு முக்கியமான, முற்றிலும் சுவாரஸ்யமான அரசியல் கலந்த அழகியல் தொகுப்பு.
Be the first to rate this book.