சூழலியல் வெறுமனே கல்வி அல்ல, அது வாழ்க்கை. ரத்தமும் சதையும் என்பார்களே; அதுபோல் இயற்கையில் தோய்ந்து அதன் ஓர் அங்கமாகவே அனுபவித்து வாழுகின்ற வாழ்க்கைதான் சூழலியல்,' என்று பேசுகிற 'ஏழாவது ஊழி' நூல் பசுமை இலக்கியத்தையும் தாண்டித் தமிழிலும் தீவிரக் கவனம் கொள்ள வேண்டிய நூல்.
சூழலியல் குறித்துப் பெரும் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கும் இன்றைக்குப் பத்தாண்டுகளுக்கு முன்பாகவே அதன் அத்தனை கூறுகள் குறித்தும் விரிவாகவும் ஆழமாகவும் எழுதியிருக்கும் பொ.ஐங்கரநேசன், ஈழத்தைச் சேர்ந்த சூழல் இதழியலாளர். தற்போது அங்கு வடக்கு மாகாண அமைச்சராக அவர் பணியாற்றிவருவது குறிப்பிடத்தக்கது. நாற்பத்தோரு கட்டுரைகள் அடங்கிய இந்நூலின் பேசுபொருள் புழு, பூச்சியில் தொடங்கிப் புவிவெப்பமாதல் வரைக்கும் விரிவானது.
Be the first to rate this book.