ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக வெளிப்படும் பாரதி நிவேதனின் உணர்வுகள் கலைத்துவமாக அனுபவமாற்றம் பெறுவதால் மிகவும் கவனிப்புக்குள்ளாகின்றன. பின்நவீனத்துவ இலக்கியப் போக்கினை உணர்ந்து, உள்வாங்கிய படைப்பு மனத்தின் தனித்துவமான வெளிப்பாடுகளாக இவரது கவிதைகள் உருப்பெறுவதனால், தமிழ்ச் சூழலினின்றும் அந்நியமாகி நிற்காமல், வாசக மனத்துடன் சகஜமாக இணக்கம் கொள்கின்றன. கவிதைகளில் உள்ளார்ந்து வெளிப்படும் மரபின் பின்புலமும் இதற்கொரு முக்கியக் காரணம் எனலாம்.
Be the first to rate this book.