ஏற்றுமதி தொடர்பான மொத்தத் தகவலும் அடங்கிய ஒரு தமிழ்ப் புத்தகம் இது. பிஸினஸ் செய்யத் தொடங்கும் ஒரு நபர் தாமே களத்தில் இறங்கி பிசினஸுக்குப் பெயர்வைப்பதிலிருந்து, அரசிடம் பதிவு செய்வது, முறையாக வரி கட்டுவது போன்ற அடிப்படையான விஷயங்களை முதலாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
ஒருவேளை ஒருவர் தொடங்கும் தொழில் ஏற்றுமதியாக இருந்தால் என்ன பொருள், அதற்கான இயந்திரம் என்ன என்பது தொடங்கி ஆர்டர் எடுப்பது... வாடிக்கையாளரின் நம்பகத்தன்மையைப் பெறுவது... வங்கிகளுடன் இணக்கமான தொடர்பில் இருப்பது.. என்னென்ன பொருள்களை ஏற்றுமதி செய்வது, எந்த விமானத்தில் பொருள்களை அனுப்புவது, பொருள் ஏற்றுமதியாகும் நாடு, அதை இறக்குமதி செய்யும் நபர் இந்த இரண்டுக்கும் இடையில் இ.சி.ஜி.சி தரப்பில் ஆலோசித்து, பிரீமியம் பாலிசி எடுப்பது... என இதன் பின்னர் தொடர்ந்து வரும் அனைத்து முறைகளும் இந்தப் புத்தகத்தின் அடுத்தடுத்த அத்தியாயங்களில் அடுக்கப்பட்டுள்ளன.
படிப்படியான வளர்ச்சியை அடைந்து முன்னணி தொழிலதிபராக உயர்வது வரையிலான ஆலோசனைகளை அள்ளிக் கொடுத்திருக்கிறார் நூலாசிரியர் கே.எஸ்.கமாலுதீன் அவர்கள். ஆசிரியரின் சொந்த அனுபவங்களோடு 20 வருட ஏற்றுமதித் தொழிலின் இரகசியமும் நுணுக்கமும் அடங்கிய இந்த நூல் ஏற்றுமதியில் தொழில்முனைவோருக்கு ஏற்றத்தை மட்டுமல்ல... சிறந்த ஏற்றுமதியாளராக்கும். நூலில் உள்ள ஏற்றுமதி நுணுக்கங்களை அறிந்துகொண்டு வெற்றிகரமான ஏற்றுமதியாளராகுங்கள்!
Be the first to rate this book.