ஐந்தாண்டுகாலம் போலந்தில் இருந்தவர் இந்திரா பார்த்தசாரதி. அந்த ஐந்தாண்டுகளும் பிரச்னைக்குரிய காலம்தான். ஒன்றல்ல, இரண்டல்ல, அவரது நூற்றுக்கணக்கான விநோத அனுபவங்கள் மற்றவ்களுக்கு சுலபத்தில் கிடைக்காதவை. ஐரோப்பிய அரசியல், ஒரு புதுப் பரிமாணம் எடுத்துக்கொண்டிருந்த எண்பதுகளில், போலந்து சந்தித்த மக்கள் புரட்சியை நேருக்கு நேரு பார்த்தவர். இ.பா. அந்த தேசத்தின் உற்பத்தி சுத்தமாகப் பாதிக்கப்பட்டிருந்த காலகட்டம் அது. பற்பசை வாங்கவேண்டும் என்றால்கூட, ஒரு மைலுக்கு க்யூ நிற்கும். அதுவும் இந்திய பற்பணை. இங்கிருந்து ரஷ்யாவுக்குப் போய் அந்த ஊர் முத்திரையைப் பெற்றுக்கொண்டு போலந்துக்கு விற்பனைக்கு வரும். ரொட்டிக்கு க்யூ. எண்ணெய்க்கு க்யூ. உடைகளுக்கு க்யூ. வண்டிக்கு க்யூ. ஒரு குண்டூசி வேண்டும் என்றாலும் க்யூவில் நின்றுதான் வாங்க வேண்டும். போலந்தாக இருந்தால் என்ன, புதுப்பேட்டையாக இருந்தால் என்ன? மக்கள், மக்கள்தான். பிரச்னை, பிரச்னைதான்.
Be the first to rate this book.