திருவிதாங்கூரில் நடைபெற்ற பொறுப்பாட்சிப் போராட்டத்தில் துவங்கி, கேரளாவில் ஏற்பட்ட கம்யூனிஸ்ட் ஆட்சி வரையிலுமான கால் நூற்றாண்டின் வரலாறுதான் இந்நாவல். அதிகாரபூர்வமானதென்று சொல்லக்கூடிய முறையில் தகழி இந்தக் கதையைச் சொல்லியிருக்கிறார். ஆனாலும், பாரபட்சமற்ற ஒரு பார்வையாளராகவே தகழி அரசியல் விமர்சனங்களை நடத்துகிறார். மனோதத்துவ அடிப்படையிலுள்ள தகழியின் சொல்திறன்தான் இந்த நாவலிலுள்ள எண்ணற்ற பாத்திரங்களை நம் நினைவிலிருந்து மறைந்துவிடாமல் செய்கிறது.
'செம்மீன்' என்ற நாவல் வழியாக உலகப்புகழ் பெற்ற தகழி சிவசங்கரன் பிள்ளையின் பதிமூன்றாவது நாவல் இது. ஏழைகளின் வாழ்வைச் சித்தரித்து தழும்பேறிவிட்ட தகழியின் கை, இந்த தடவை அதிகாரவர்க்க உலகத்துக்குள்ளே புகுந்து சென்றிருக்கிறது. இந்த உலகைச் சித்தரிப்பதிலும் அவர் வெற்றியே பெற்றிருக்கிறார்.
Be the first to rate this book.