தமிழக அரசியல் வரலாற்றில் பெரியாரைப் போல் ஆழமான அதிர்வுகளை ஏற்படுத்திய, இன்னமும் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் இன்னொரு தலைவர் இல்லை. அதிகம் விவாதிக்கப்படும், அதிகம் கொண்டாடப்படும், அதிகம் எதிர்க்கப்படும் ஒரு சமூகச் சிந்தனையாளராகவும் அவரே திகழ்கிறார்.
பெரியாரை எப்படிப் புரிந்துகொள்வது? எப்படி அவரை மதிப்பீடு செய்வது? அவருடைய எழுத்துகளும் உரைகளும் பலவாறாக, பலரால் புரிந்துகொள்ளப்படுவது ஏன்? வேண்டுமென்றே அவருடைய சொற்கள் தவறாகத் திரிக்கப்படுகின்றனவா? அவருடைய பிம்பம் தேவைக்கும் அதிகமாக மிகையாக ஊதிப் பெரிதாக்கப்படுகிறதா? சாதி எதிர்ப்பு அரசியலுக்கு அவர் தேவையா, தேவையில்லையா?
இந்நூலில் இடம்பெற்றிருக்கும் கட்டுரைகள் பெரியாரைப் பல்வேறு கோணங்களிலிருந்து ஆராய்கிறது. பெரியாரை ஏற்பவரின் குரல், விமரிசிகர்களின் குரல், நிராகரிப்பவர்களின் குரல் மூன்றும் இதில் சேமிக்கப்பட்டிருக்கிறது. தி வயர் இணைய இதழில் வெளிவந்த இந்தக் கட்டுரைகள் ஆங்கில வாசிப்புலகில் பரவலான விவாதங்களை ஏற்படுத்தியது. தமிழிலும் இந்த விவாதங்கள் நடைபெறவேண்டும் என்பதே இந்நூலின் ஒரே குறிக்கோள்.
Be the first to rate this book.