எட்டுக் கதைகளின் தொகுப்பு இது.தமிழ்நாட்டில் அறிவொளிக் காலத¢தில் தொகுக்கப்பட்ட கதைகளும் சில வெளிநாட்டுக் கதைகளும் விவாதக் குறிப்புகளுடன் தரப்பட்டுள்ளன.எவரும் வாசித்து விடக்கூடிய எளிய நடையில் கதைகள் சொல்லப்பட்டு எவரிடம் சென்று இக்கதைகள் வாசிக்கப்பட வேண்டும் என்கிற சுவாரஸ்யமான சிபாரிசுகளுடன் வந்துள்ள புத்தகம்.உதாரணத்துக்கு ஒரு கதை.மறைந்த அறிஞர் ஏ.கே.ராமானுஜம் அடிக்கடி எடுத்துக்காட்டிப் பேசும் கதை.ஒரு ஊரில் ஒரு விதவைத்தாய்.அவளுக்கு இரண்டு மகன்கள் இருவருக்கும் கல்யாணம் ஆனதும் கிழவிக்கு மரியாதை குறைகிறது.மகன்களும் மதிப்பதில்லை.ஆகவே மருமகள்களும் மதிப்பதில்லை.நாலு பேரும் திட்டத் திட்ட தாயின் மனப்பாரம் பெருகி உடலும் பருத்து விடுகிறது.முடிவில் அவள் ஊரின் கடைசியில் நிற்கும் சத்திரத்தின் குட்டி சுவருடன் பேசத் துவங்குகிறாள்.மூத்த மகன் ப்ச்சின் கொடுமையைச் சொல்லி அழவும் ஒரு சுவர் இடிந்து விழுகிறது.அவளுடைய பாரம் கொஞ்சம் குறைக¤றது.இப்படியே நாலுபேர் கொடுமையும் சொல்லி முடிக்க நாலு குட்டிச்சுவர்களும் இடிந்து வீழ அவள் உடலும் மெலிந்து போகிறாள்.இப்போது அவளைப் பார்க்கும் மக்கள் இரக்கப்படுகிறார்கள்.இது கதை.இக்கதையை பேச்சுப் புறக்கணிக்கப்பட்ட குடும்பங்களிலும்,வகுப்பறைகளிலும்,அலுவலகங்களிலும் வாசிக்க வேண்டுமென தொகுப்பாளர் குறிப்பு முடிகிறது.
Be the first to rate this book.