‘படைப்பு இறைவனுக்கு வேறானது; இறைவன் ஒருபோதும் படைப்பாகிவிட மாட்டான்; படைப்பு ஒருபோதும் இறைவனாகிவிடாது’ என்னும் அடிப்படையான ஸூஃபித்துவப் புரிதலை வலியுறுத்தி, அப்புள்ளியிலிருந்து மேலும் ஆழங்கள் நோக்கிப் பயணித்து, ‘படைப்புகளுடன் இறைவன் இருக்கும் நிலை எத்தகையது? இறைவனுக்கும் படைப்புக்குமான தொடர்பு எத்தகையது? இறைவனின் இருத்தலும் படைப்பின் இருத்தலும் எப்படி வேறுபடுகின்றன? இறைவன், படைப்பு ஆகியோரின் எதார்த்தம் என்ன?’ என்றெல்லாம் எழும் வினாக்களுக்கு இவ்வுரைகள் விளக்கமாக விடை சொல்கின்றன.
இஸ்லாமிய இறையியலை ஸூஃபிகள்தாம் சரியாக விளங்கியிருக்கின்றனர் என்றும், அவ்விளக்கங்களை உள்வாங்கிக்கொண்டோர்தாம் இஸ்லாத்தின் அரசியல் பரிமாணத்தையும் சரியாகச் செயல்படுத்த முடியும் என்றும் ஆசிரியர் நம்புகிறார். ஆதலால், அவரின் போதனைகள் ஸூஃபிகளிடம் அரசியல் செயல்பாட்டைத் தூண்டும் நோக்கிலும் அமைந்திருப்பதைக் கவனிப்பது சுவாரஸ்யமானது.
Be the first to rate this book.