எங்கள் வாசல் வேம்பின் சிறுகுச்சி என் சின்னம்மாக்களுக்கு மூக்குத்தியான கதையை, கம்பும் சோளமும் இடித்துக் காய்ச்சிய கூழுக்கு காலணா வெள்ளகட்டி அள்ளித் தந்த ருசியை, திருவிழா நாட்களில் தன் நிறம் வெள்ளை என்பதையே மறந்துபோகும் அளவிற்கு கரிப்பிடித்த சட்டியில் கொதிக்கும் நாட்டுக்கோழி வாசத்தை, பாறையிலும் முளைவிடும் ஆலவிதை போல் உழைத்து உழைத்து காய்த்துப்போன உடற்கூட்டிலிருந்து உதயமாகும் காதலை எல்லாம் நான்தானே எழுதவேண்டும்.
-ஏகாதசி
Be the first to rate this book.