ஏகாதிபத்தியம் என்றால் வெறுமனே பொருளாதார, ராணுவ ஆதிக்க அமைப்பாகவும், சுரண்டல் அமைப்பாகவும் மட்டுமே புரிந்து கொள்ளக் கூடாது. உலகம் தழுவிய சுரண்டல் நீண்ட காலம் தொடர வேண்டுமானால் பண்பாட்டு ஆதிக்கம் அதில் பகுதியாக இருந்தாக வேண்டும். பண்பாட்டு ஏகாதிபத்தியம் மரபான, நவீன வடிவங்கள் இரண்டையும் உள்வாங்கும்.
கடந்த நூற்றாண்டுகளில், காலனி நாடுகளின் மக்களிடையே பணிவாக இருப்பது, விசுவாசத்துடன் நடந்து கொள்வது எனும் கருத்துக்களை தெய்வ கட்டளை என்றும், மீற முடியாத நீதி நியமங்கள் எனும் பெயராலும் அரைத்து ஊற்றினார்கள். அப்போதைய சர்ச், கல்வி அமைப்பு, அரசாங்க அதிகாரிகள் இதில் முக்கிய பாத்திரம் வகித்தனர். பண்பாட்டு ஏகாதிபத்தியத்தின் அந்த மரபான இயந்திரம் இப்போதும் வேலை செய்தபடியே, தற்போதைய நவீன கருவிகளினூடாக ஆதிக்கத்தை விரிவாக்கிக் கொண்டுள்ளது.
தற்போது, வாடிகன் சர்ச், பைபிள், அரசியல் பிரமுகர்கள், அவர்களுடைய பிரச்சாரங்கள் ஆகியவற்றைவிட, ஹாலிவுட் சினிமாக்கள், ஊடகங்கள், டிஸ்னி லேண்ட் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் அதிக செல்வாக்கு செலுத்துகின்றன.
- ஜேம்ஸ் பெட்ராஸ்.
Be the first to rate this book.