சதாம் ஹுஸைன் தொடக்கத்தில் தேசியவாதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டாலும் 1990-களில் இஸ்லாத்தை நோக்கி எட்டுகள் வைத்தார். 2000- & தொடங்கிய போது அவர் இஸ்லாத்தில் முழுவதுமாக நுழைந்திருந்தார். இஸ்லாமிய உணர்வும் அல்குர்ஆனின் உறவும் அவரை ஆலிங்கனம் செய்த போதுதான் சுகந்தத் தென்றல் சூறாவளியாக மாறியது.
தப்புகள், தவறுகள், பிழைகள், தீமைகள் எல்லாவற்றுக்குமாக மன்னிப்புக் கேட்கும் போதே இறைவன் ஒருவனை மன்னித்து விடுகிறானே. அவ்வாறு மன்னிக்கப்பட்ட மனிதரை மனிதர்கள் மன்னிக்காமலிருக்க முடியுமா?
மன்னிக்கப்பட்ட மாமனிதர் சதாம் ஒரு மாபெரும் வீரன் என்பதை கழுமரத்தின் முன் நிறுத்தப்பட்ட போதும் நிரூபித்தார்.
அப்போது சதாமின் முகத்தை ஒருவன் கறுப்புத் துணியால் மூட முயன்ற போது அவனைத் தடுத்தார்.
“நான் ஏகாதிபத்தியவாதிகளின் எதிரி. அல்லாஹ்வுக்காக உயிரைப் பலி கொடுக்கும் நான் நாளைய ஈராக்கின் வாள்” என முழங்கிய சதாமை நினைவுகூர்ந்து ஏகாதிபத்தியத்திற்கு எதிரான வாளாக நாமும் மாற இந்நூல் கட்டாயம் அழைத்துச் செல்லும்.
Be the first to rate this book.