துறவிகள் குடும்பத்துக்குள் இருக்க முடியாதா? முடியும். மகத்-தான ஞானிகள், துறவிகள் குடும்பத்துக்குள், குழந்தை குட்டிகளுடன் இருந்திருக்கிறார்கள்.
அபிமன்யு - உத்தரை இவர்களின் குழந்தை பரிட்சித்து. இறந்து பிறந்தது. கரிக்கட்டையாகப் பிறந்த பரிட்சித்து எப்படிப் பிழைக்க முடியும்? மனைவி, குடும்பத்தோடு வாழ்ந்தாலும், மனசில் கொஞ்சம்-கூடக் காமம் இல்லாத மனிதன் எவனோ அவன் குழந்தையைத் தொட்டால் குழந்தை பிழைப்பான் என்கிறது விதி.
ரிஷிகள் தொட்டார்கள். குழந்தை பிழைக்கவில்லை. முனிவர்கள், துறவிகள், ஞானிகள் எல்லோரும் தொட்டார்கள். குழந்தை அசையவில்லை. தாய் அலறுகிறாள். கிருஷ்ணன், 'நான் தொடலாமா' என்கிறான். எல்லோரும் சிரிக்கிறார்கள். அவன் மனைவிகள் திகைக்கிறார்கள். கிருஷ்ணன் தொட்டான். குழந்தை பிழைத்துக்கொண்டது.
- முன்னுரையிலிருந்து...
Be the first to rate this book.