ஒரு மனிதன் தன் லட்சியத்தில் வெற்றி பெற, கையில் பத்து பைசா கூட இருக்கவேண்டிய அவசியமில்லை என்பதை நிரூபித்துக் காட்டியவர் யானி. க்ரீஸிலிருந்து சாதாரண ஆளாகக் கிளம்பி இன்று உலகையே தன் இசையால் மயக்கி வைத்திருக்கிறார்.
மேற்கத்திய க்ளாசிக்கல் இசை மரபில் மொஸார்ட்டைத் தொடர்ந்து வந்த மாபெரும் வம்சத்தில், யானிக்குப் பிறகு, உச்சம் தொட்டவர்களாக இன்று யாருமில்லை. பாரம்பரிய இசையின் அழகு சிதையாமல் காலத்துக்கேற்ற வடிவில் அவர் வழங்கிய இசைக்கோவைகளுக்கு அமெரிக்காவில், மெக்சிகோவில், ஜப்பானில், ஐரோப்பாவில், ஆசியாவில் – சீனா, இந்தியா உள்ளிட்ட அத்தனை நாடுகளிலும் ரசிகர்கள் உண்டு. உலகில் வேறு எந்த ஒரு கலைஞனுக்கும் தான் வாழும் காலத்திலேயே இப்படியோர் இமாலயப் புகழ் கிடைத்தது கிடையாது. இசையுலகில் யானி நடத்திக் கொண்டிருப்பது தனி சாம்ராஜ்ஜியம்.
அக்ரோபொலிஸில் நடந்த இசை நிகழ்ச்சி யானி வாழ்க்கையின் பேய்த்தனமான வெற்றி. இதன்மூலம் சர்வதேசப் புகழ், பணம், அங்கீகாரம் அனைத்தையும் அடைந்தார் யானி. இன்றைக்கும் யானியின் ‘லைவ் அட் தி அக்ரோபொலிஸ்’ வீடியோ ஆல்பம் உலகின் மிகச்சிறந்த ஆல்பங்களில் ஒன்று.
யானி, இசைக்குச் சொல்லும் இலக்கணம் வெகு எளிமையானது. மக்களுக்குப் பிடிக்கவேண்டும். அதுதான் சரியான இசை. மக்களின் நாடி நரம்புகளில் வியாபித்து, அவர்களின் மனத்தை வயப்படுத்திய மகா இசைக்கலைஞனின் சுவாரஸ்யமான வாழ்க்கை பரவசத் தமிழில்.
Be the first to rate this book.