இறைவனை வழிபட ஸ்தோத்திரங்கள்,மந்திரங்கள், யந்திரங்களோ நமது தேவைகளை,ஆசைகளை நிறைவேற்றி வைக்கப் பெரிதும் உதவுகிறது.மந்திரம் என்பது நினைப்பவர்களைக் காப்பாற்றக்கூடியது. மந் - நினைத்தல், அறிதல், திரம் - காத்தல் என்பதால் மனதால் வாக்கால் செபித்து உச்சரித்து நமக்கு வேண்டியவைகளை உபாசனையில் பெறலாம். இறைவனின் வடிவு மூன்று என்றும் அவைகள் தூலம்,சூக்கும்ம் , அதிசூக்குமம் என்றும் அவைகளில் தூலவடிவம் மந்திரங்கள் என்றும், சூக்கும் வடிவம் உயிர்க்கு உயிராய் இருத்தல் என்றும், அதிசூக்கும் வடிவம் உண்மையறிவானந்தமயமான சிற்சக்தி வடிவு என்றும் கூறுவர். மந்திரம் என்பது எல்லாவற்றையும் அறிதலையும் உயிர்களுக்கு அருள் புரிதலையும் செய்வது நினைப்பவனைக் காப்பதும் ஆகும்.எப்போதும் நல்லதையே நினை. நல்லதையே செய். நல்லதையேபார் என சான்றோர்கள் கூறிவருகிறார்கள்.வினையை விதைப்பவன் வினையை அறுப்பான். தினையை விதைத்தவன் தினையை அறுப்பான் என்ற பழமொழி கேள்விப்பட்டிருப்பீர்கள்
Be the first to rate this book.