நூல்களை புதினம் வடிவில் எழுதி மக்களுக்கு விருந்து படைப்பது எழுத்தாளர்கள் எல்லோராலும் முடியாது. சுவாரஸ்யம் நிறைந்த வாசிப்பை தூண்டுவதே புதினங்களின் தனிச்சிறப்பு. ஹஸன் அவர்கள் எழுதிய ‘சிந்து நதிக்கரையினிலே’ போன்று ‘யமுனை நதிக்கரையில்’ என்ற இந்த நூலும் மறைக்கப்பட்ட பல உண்மைகளை வெளிக்கொணர்வதோடு வாசிக்க சுவாரஸ்யமாகவும் அமைந்துள்ளது இந்த நூலின் தனிச்சிறப்பு.
நூலாசிரியர் இப்னு முஹம்மது அவர்களின் இந்த நன்முயற்சி தொடர வேண்டியது காலத்தின் கட்டாயம். முகலாய மாமன்னர் ஔரங்கசீப் குறித்த பெரும்பாலான நூல்கள் அவரைப் பற்றிய தவறான கண்ணோட்டத்தையே மக்கள் மனதில் திட்டமிட்டு விதைத்துள்ளன. அந்த தவறான கண்ணோட்டங்களை தகர்த்து தவிடுபொடியாக்குகின்றது இந்நூல்.
5 Must Read
Ahamed Bathusha 09-03-2025 02:02 am