ஆங்கிலேயர்களுக்கு எதிராக, ஒரு ராணுவத்தையே கட்டியெழுப்பிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்...அவருடைய வீரம் செறிந்த வாழ்வு இறுதியில் என்னவாக ஆயிற்று?
சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டு வெவ்வேறு விமானங்களில் ரகசியப் பயணம் மேற்கொண்ட சுபாஷின் கடைசி விமானம் ஃபார்மோசா தீவுப் பகுதியில் விபத்துக்குள்ளாயிற்று. அல்லது அப்படி ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த விபத்தில் அவர் இறந்தாரா, மறைந்துபோனாரா? அவரைப் பற்றி அறிந்தவர்கள் அனைவரும் ஒவ்வொருவராகக் காணாமல் போனதில் ஏதேனும் செய்தி இருக்கிறதா? சர்வதேச போலீஸிலிருந்து ரஷ்ய உளவுத்துறை வரை இந்த விவகாரத்தில் செய்த திரைமறைவு வேலைகள் என்னென்ன? உலகின் பல்வேறு நாடுகள் இதைத் தோண்டித் துருவுவதன் பின்னணி என்ன?
இன்னும் எத்தனை எத்தனையோ திகிலூட்டும் கேள்விகளுக்கான பதில்களை இந்த நாவல் ஒன்றோடொன்று பின்னி, எடுத்தால் முடிக்காமல் கீழே வைக்க முடியாது என்கிற விறுவிறு நடையில் சொல்கிறது. ஒரு நாட்டின் மாபெரும் தலைவரின் முடிவு மர்மமாக நீடிப்பதை இண்டு இடுக்கு விடாமல் ஆராய்கிறது இந்தப் புத்தகம். உங்கள் அறிவைச் சீண்டியபடியே எதிர்பாராத சம்பவங்களைக் கோத்து விவரிக்கும் இந்நூல் ஒரு முடிவை நோக்கி உங்களை நகர்த்துகிறது.
Be the first to rate this book.