சமூக உறவுகளால், அமைப்புகளால், சரித்தன்மைகளால், ஏமாற்றப்ட்ட நம் அனைவருக்குமான பொது அடையாளம்தான் 'ஏமாளி'..
ஹைப்பர் நகரங்களின் புதுப்பொருளாதார பணிச்சூழல்களில் தொடர்ந்து தனிமையடைந்து வரும் மனிதர்கள்..குடும்பம் என்ற பிசிபிசுத்த அமைப்புக்குள்ளும் தொடர்ந்து வெறுமையடைந்து வரும் மனிதர்கள், தன் உயிர்த்தன்மையை மீட்டுக்கொள்வதற்கான அவர்களது ஓயாத எத்தனங்கள் இக்கதைகளில் தீவிரமாக அணுகப்பட்டுள்ளதைக் காணலாம்..அலுவலகம், குடும்பம் , சமூகம் என நாம் வார்த்திருக்கும் ஒரு அன்றாடத்துக்குள் மறைந்திருக்கும் மௌனவெளிகளை, நனவு கடந்த இடங்களை இக்கதைகள் ஆழ ஊடுருவுகின்றன. துன்பமும் தோல்வியும் அவமானமும் மனிதனை மென்மேலும் சாரப்படுத்துவதை கவித்துவப்படுத்துவதை நாம் இத்தொகுப்பில் மௌனமாக உணர்கிறோம்..
- ப்ரவிண் பஃறுளி
Be the first to rate this book.