இந்தக்கதை 1940களில் இரண்டாம் உலகப்போரின் போது நாஜிகளால் கைது செய்யப்பட்டு கான்சென்ட்ரேஷன் கேம்ப்களில் அடைபட்ட மனைவி, மூத்த மகள், மகன்களை விட்டுத் தப்பி ஓடி இந்தியாவின் பெங்களூரில் வந்து தஞ்சம் புகுந்த அப்பா மற்றும் இளைய மகளின் புனைகதை. பெங்களூர் வந்தவர்கள் ஒரு சிறிய வீட்டில் வாடகைக்கு அமர்ந்து, இந்தியன் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் சைன்ஸில் விஞ்ஞானியாக வேலை செய்துகொண்டு, 1942இல், இறந்துவிட்ட ஒரு யூதத் தந்தை விட்டுச் சென்ற ஒன்பது வயது மகளின் கதை. பக்கத்து வீட்டார் அப்பெண்ணை எடுத்து வளர்த்து, அவர் மகனுக்கே பிறகு திருமணம் செய்து வைக்கிறார்கள். யூதளாக இந்த மண்ணில் காலடி எடுத்து வைத்து, தன் மதம், நாடு, கலாச்சாரம் எல்லாவற்றையும் துறந்து இந்த மண்ணோடு கலந்து இந்துவாகவே வாழ்க்கையை கழித்துவிடும் பெண். தன் அறுபதுகளில் தனது வேரைத்தேடி ஐரோப்பா, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஜெரூசலம் போன்ற பல நாடுகளை அலைந்து திரிந்து கடைசியாக உயிருடன் இருக்கும் தன் 70வயது அக்காவைத் தேடிக்கண்டுபிடிப்பதும், அக்கா இஸ்ரேலில் குடியேற அழைக்க அதை மறுத்து “நான் நானாகவும். அவர்கள் அவர்களாகவும் இருந்துகொண்டு, நாமாக வாழமுடியும்” என்று இந்தியாதான் தனது நாடு என்று இந்தியாவுக்குத் திரும்புவதுதான் கதை.
5 Must read
உலுக்கியெடுக்கும் கதை.... உறுத்தல் இல்லாத மொழிப்பெயர்ப்பு....
Karthykeyan M N 31-12-2020 10:49 am