பயணிக்கிற எல்லோரும் தங்கள் அனுபவங்களைப் பதிந்து விடுவதில்லை.எழுதுவதற்குப் பேனா மட்டுமே போதாது.அதற்கான எழுத்து மனநிலை வேண்டும்.வாசிப்புச் சுவாரசியமும்,சரளமான நடையும்,மொழியாளுமையுடன் கூடவே கலாரசிக மனம் இவை அனைத்தும் எழுத்தாளர்-கவிஞர் ராஜகவி ராகிலுக்கு வாய்த்திருக்கிறது. வாழ்வின் சகலத்தையும் கவித்துவ மன நிலையோடு அணுகி எழுத்தாகப் படைக்கிற அவர் வரிகள் எளிதில் வாசிக்கிறவர்கள் மனதில் ஆழச் சென்று பதிகின்றன.நட்புடன் கூடிய ஒரு பயணத்தின் அனுபவங்களை அழகான வரிகளில் மிகையற்ற வார்த்தைகளில் ‘யாழ் மீட்டுய கண்கள்’ என்ற இந்தப் பயணக் கட்டுரைகளாகத் தொகுத்திருக்கிறார்.
- பொன்.வாசுதேவன்
Be the first to rate this book.