ராஜஸ்தானில் ஆட்சி மொழி ராஜஸ்தானி இல்லை. ஒரு பள்ளிக் கூடம் கிடையாது. கல்லூரி இல்லை. மார்வாடி கோயங்கா தமிழ்நாட்டில் தமிழ்ப்பத்திரிகை நடத்துகிறார். ஆனால் ராஜஸ்தானில் ராஜஸ்தானியில் ஒரு பத்திரிகை கிடையாது. மார்வாடி மொழியிலும் இல்லை. ஏதோ சாகித்ய அகாதமி உபயத்தில் பரிசு கிடைக்கிறது.
தாஜ்மகால் ஓட்டல் மும்பை அடையாளம். பெர்சியாவில் இஸ்லாமியர்கள் ஆட்சியும் மத மாற்றமும் ஏற்பட்டபோது, மத சுதந்திரத்திற்காக புலம் பெயர்ந்து வந்தவர்கள் பார்சிகள். அவர்கள் படித்து மும்பையோடு வளர்ந்தவர்கள்.
- சா. கந்தசாமி
Be the first to rate this book.