2014-2015ம் ஆண்டின் சிறந்த சுற்றுச்சூழல் விருது பெற்ற நூல்.
விலங்கு-பறவை-மனிதர்கள் சேர்ந்து வாழ்ந்து வந்த காலகட்டத்தை தவிர்த்து, மனிதன் தனியா தனக்கான இடங்களை உருவாக்க முயலும்பொழுது உருவானது இட அழிப்பு. அவை இன்றுவரை பல வடிவங்களில் வளர்ந்து நிற்கிறது.
பறவைகள், விலங்குகள் குறைவதற்கு மிக முக்கிய காரணம் அவற்றின் வாழிட அழிப்பே ஆகும்.
மனிதர்கள் குரல் உயர்ந்து, பறவைகள் குரல் தாழ்ந்து காணப்படும் இந்த காலத்தில் சதீஸ் முத்து கோபால் பறவைகளையும், விலங்குகளையும் தேடி சென்று அவற்றின் குரல்களை கேட்டு வருகிறார்.
காடு, சரணாலயம், மலை போன்ற இடங்களுக்கு பயணம் சென்று அங்கு ஏற்பட்ட அனுபவங்களை விரிவாக எழுதி செல்கிறார். பலவித பறவைகளை நமக்கு அறிமுகப்படுத்தி படங்களுடன் தமிழ், ஆங்கில பெயர்களை கொடுத்து இருப்பது சிறப்பு.
காடு அழிப்பு, புலிகள் கணக்கெடுப்பு, பறவைகளை பார்த்தல், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என்று பல தளங்களில் இவரின் எழுத்து செல்வதால் இயற்கையை அறிந்துகொள்ள படிக்கவேண்டிய நூலாகும்.
Be the first to rate this book.