பல நாட்டுத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படித்திருப்பீர்கள். பல நாடுகளின் சரித்திரங்களை வாசித்திருப்பீர்கள்.கடலைப் பற்றியும் கடவுளைப் பற்றியும் வானத்தைப் பற்றியும் வாழ்க்கையைப் பற்றியும் தெரிந்து வைத்திருப்பீர்கள்.
எல்லாம் சரி. ஆனால் உங்களைப் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்? நீங்கள் யார்?உங்கள் கனவுகள் என்ன? உங்கள் எதிர்பார்ப்புகள் என்னென்ன? உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்? எப்படி உங்களுக்கு எல்லாவற்றிலும் வெற்றி கிடைக்கிறது?அல்லது தொட்டதெல்லாமே சொதப்புகிறது? என்ன காரணம்? எங்கே பிரச்னை?
நம்புங்கள். உங்கள் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதில் மிக கக்கியப் பங்கு வகிப்பது உங்கள் பர்சனாலிட்டிதான்!
உலக மக்கள் அத்தனை பேரையும் ஒன்பது விதமான பர்சனாலிட்டிகளாகப் பிரித்துவிடலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். அந்த ஒன்பதில் நீங்கள் எந்த ரகம்?
அதைத் தெரிந்து கொண்டால் அல்லவா நீங்கள் என்னவாக ஆக விரும்புகிறீர்கள். அதற்கு ஏற்ற விதத்தில் உங்கள் பர்சனாலிட்டியை எப்படி மாற்றி அமைத்துக் கொள்வது என்பதை அறியமுடியும்?
அதைத்தான் எளிமையாகச் சொல்லிக் கொடுக்கிறது இந்தப் புத்தகம்.
Be the first to rate this book.