கொங்கணி மொழியிலிருந்து நேரடியாகத் தமிழுக்கு நூல்வடிவில் வெளிவரும் முதல் படைப்பு ‘யார் அறிவாரோ’.
காட்டில் தனிமையில் வாழும் வனப்பாதுகாவலாளி ஒருவன் தன்னை எரிக்கும் காமத்தை எதிர்கொள்ளும் விதமும் அதனையொட்டிய மனப் போராட்டங்களுமே கதையின் மையம். வாசிப்போரின் அகத்தே விளம்பும் எண்ணற்ற செய்திகள் கதையிலுண்டு. தனிமையின் சலிப்பான பொழுதுகள், ஒழுங்கின்மையுடன் ஒவ்வாது நிற்கும் காமம், நோய்க்கூறு நிரம்பிய சமூகப் போக்கு
இவையனைத்தும் கதையில் கவனிக்கத்தக்கன.
நிஜத்தில் கடந்து வந்த மனிதர்களைக் கதையிலும் கடக்க நேரிடுகிற அனுபவம் வாசிப்போருக்கு வாய்க்கும்.
Be the first to rate this book.