விஜயராஜ் கவிதைகளில் பச்சை அப்பிக் கிடக்கும் பசும் காட்டில் ஓடும் மலை ஓடைகளில் மான் புழுக்கைகள் மணம் வீசுகின்றன. காட்டு வழியில் பழுதாகி நிற்கும் வாகனங்களில் குரங்குகள் கையெழுத்திடுகின்றன.
சூரியனைச் சூடின்றி கட்டி வைத்திருக்கிறது சிலந்தி.
கிளிகள், அணில்கள் தங்கள் எச்சில் சுவையோடு
தானமிடுகின்றன. மரமேற அஞ்சும் சிறுவனுக்கு ஆகாயத்தின் கனிகளை, தேனடை கடிகாரத்தில் நொடிகள் பாடுகின்றன. திசை கிழிய தெறித்து ஓடுகின்றன காட்டுப்பன்றிகள், நாக்கில்லா கோயில் மணி உள்ளிருந்து தலைகீழாய்ப் பார்க்கிறது பல்லி.
ஆடுகள் அந்தி சூரியனை தும்மி தெறிக்க வைக்கின்றன. யானைகள் இவர் கவிதைகளில் நாற்பத்தொன்பது இடங்களில்
வந்து போகின்றன.
- கவிஞர் ஜெ.பிரான்சிஸ் கிருபா
Be the first to rate this book.