சூழலியல் குறித்து உள்ளார்ந்த விருப்பமுள்ள இருதயங்கள் வாசிக்க வேண்டிய புத்தகம்…
யானை டாக்டர் – தமிழில் மிக அதிகமாக மக்கள் பிரதியாக அச்சுப் பதிக்கப்பட்டு, ஒருத்தருக்கு ஒருத்தர் வாஞ்சையோடு பகிர்ந்துகொண்ட புத்தகங்களுள் ஒன்று இது. ஒரு எளிய கதை, காட்டின்மீதான நேசிப்பை அகத்துள் ஏற்படுத்துமா? என்ற கேள்வியை அறிவுச்சமூகம் எழுப்புமாயின், ஜெயமோகனின் யானை டாக்டர் கதையை நாம் துணிந்து முன்வைக்கலாம்.
கால்நடை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, யானைகளின் உடல்நிலையைப் பேணுவதற்காக உருவாக்கிய விதிமுறைகள்தான் இந்திய வனவியல் துறையின் கையேடாக இன்றுள்ளது. முதுமலை யானைகள் புத்துணர்வு முகாமை முன்மொழிந்து, கோவில் யானைகளை வருடத்துக்குச் சில நாட்களாவது வனத்துள் உலவ வைத்தவர். உலக வனமருத்துவர்கள் பலருக்கும் மானசீக ஆசானாக இன்றளவும் நினைவில் இருப்பவர் யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி.
எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய இப்புத்தகம், தன்னறம் நூல்வெளியின் வாயிலாக மறுஅச்சுப்பதிப்பு அடைந்த புத்தகமாக வெளிவந்திருக்கிறது. புத்தகத்தின் உற்பத்தி விலைக்கே நண்பர்களுக்கு அனுப்பிவைக்க உள்ளோம். சூழலியல் நிகழ்வுகளில், திருமணங்களில், இன்னும் பல சுபநிகழ்வுகளில் அன்பளிப்பாக இப்புத்தகம் மனிதர் தொட்டு மனிதருக்கு பரிமாற்றப்பட்டு வருகிறது. இன்னும் சேரவேண்டிய கரங்களும் நிறைய இருக்கிறது….
Be the first to rate this book.