பாரதியின் நினைவு நூற்றாண்டை ஒட்டி அவரது ஆளுமையை இளம் தலைமுறையினர் அறியும் வகையில் ‘யாமறிந்த புலவன்’ என்ற நூலை நான் ஆய்வு செய்து உருவாக்கி உள்ளேன். இந்த நூல் 1918 ஆம் ஆண்டு முதல் 2021 வரை கடந்த நூறு ஆண்டுகள் பாரதி பற்றி பல்வேறு கருத்தியலை முன்வைத்து எழுதப்பட்டுள்ள விமர்சன புத்தகம்.
எனது 13 ஆண்டுக்கால உழைப்பு மொத்தம் 1400 பக்கங்களில் மிகப் பிரமாண்டமாக உருவாகி உள்ளது. பாரதி நண்பர் வ.வெ.சு. ஐயர் தொடங்கி கலைஞர் முதல் பல்வேறு தலைவர்களின் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. எனது 13 ஆண்டுக்கால ஆராய்ச்சி இந்தப் புத்தகம். காலத்தால் அழியும் நிலையிலிருந்த பல படைப்புகளை மீட்டுத் தந்துள்ளேன். அதில் உள்ள பல படைப்புகள் 100 ஆண்டுகள் கழித்து முதன்முறையாக நூலாகி உள்ளது.
மேலும் இந்த நூலின் பின்பகுதியாக அறிஞர் அண்ணா, பாவேந்தர் பாரதிதாசன், தோழர் ஜீவானந்தம், கி.வா.ஜ., பாரதி தம்பி விசுவநாத ஐயர் உள்ளிட்ட பலர் பேசிய சொற்பொழிவுகளைக் கண்டறிந்து 300 பக்கங்களில் தொகுத்து அளித்துள்ளேன். இது பாரதி ஆய்வில் மிக முக்கியமான நூல்.
Be the first to rate this book.