சகஉயிர்களின் மீதான மாகருணையின் சுநாதம் வெவ்வேறு ராகங்களில் தொகுப்பெங்கும் கேட்டுக்கொண்டே இருக்கிறது, வேறுவேறு ஏறுநிரல், இறங்குநிரல்களில். ஒன்றுபோலில்லை இன்னொன்று. சிலது ஔடவம், சில துஷாடவம், சில சம்பூர்ணம். இந்த விதவிதமான நாதங்களை நீங்கள் காதுகொடுத்துக் கேட்க வேண்டும்.
முதல் தொகுப்புக்கான எந்தச் சலுகையையும் கோராமல் இன்னும் எழுதிக்கொண்டே இருங்கள் தேவசீமா என்று நாம் அவரைக் கேட்கும்படி வைத்திருப்பது இக்கவிதைகளின் வெற்றி என்று சொல்ல வேண்டும்.
- கவிஞர் ரவிசுப்பிரமணியன்
Be the first to rate this book.