ருவன் தன்னுடைய ஊரைக் கடந்து வேறு எந்த ஊருக்குச் சென்றாலும் அந்த ஊருக்கு அந்நியனே. அந்நியன் என்னும் அடையாளத்தோடு வாழ்வதன் வலியும் அவமானமும் மிக ஆழமானவை. அவை ஒருவனுடைய வாழ்நாள் முழுதும் தொடர்ந்து வேதனைப்படுத்தும் ஆறாத ரணங்கள். வரலாற்றில் எல்லாக் காலகட்டத்திலும் பிழைப்பதற்கு உடலுழைப்பை மட்டுமே நம்பியிருக்கும் மக்கள் அடைந்த ரணங்களுக்கும் வடுக்களுக்கும் அளவே இல்லை. ஒருவகையில் அது உலகப்பொது வேதனை. அயல்மண்ணுக்குச் சென்ற இந்தியர்களானாலும் சரி, இந்தியாவுக்கு வந்த அயல்நாட்டு மனிதர்களானாலும் சரி, இரு தரப்பினரின் வேதனைகளும் முடிவின்றி நீள்கின்றன. கனகராஜ் பாலசுப்பிரமணியின் சிறுகதைகள் அந்த வேதனையின் குரலையும் கையறுநிலையின் அவலத்தையும் இலக்கியப்பரப்பில் பதிவு செய்கின்றன. கன்னடத்தில் எழுதும் கனகராஜை நேரடியாக ஒரு தொகுதி வழியாக தமிழ்வாசகர்களின் கவனத்துக்குக் கொண்டுவந்திருக்கும் நல்லதம்பியின் முயற்சி பாராட்டுக்குரியது.
- பாவண்ணன்
Be the first to rate this book.