சாவி என்கிற சா. விஸ்வநாதன் அறுபதாண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைத் துறையில் வாழ்ந்து, பல முக்கியத் தடங்களைப் பதித்தவர். ஆனந்த விகடன், கல்கி போன்ற பத்திரிகைகளில் தொடக்கத்தில் இதழியல் பயின்று, தினமணி கதிரின் ஆசிரியராக இவர் பொறுப்பேற்றபிறகு நிகழ்த்திய சாதனைகள் பல. சாவிக்காகவே கலைஞரால் தொடங்கப்பட்ட இதழ் குங்குமம். பிற்காலத்தில் சாவி என்ற பத்திரிகையைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தியவர்.
இன்று எழுத்திலும் பத்திரிகைத் துறையிலும் பிரபலமாக இருக்கும் பலபேர் சாவியின் கண்டுபிடிப்புகள்.
ஒரு தேர்ந்த பத்திரிகையாளராகவே பெரும்பாலும் அறியப்பட்டாலும், எழுத்தாளராக சாவியின் பங்களிப்பு மிகவும் சிறப்பானது. நகைச்சுவை அவரது பிரத்தியேக பலம். வாஷிங்டனில் திருமணம் அதற்கு முக்கியமான சாட்சி.
Be the first to rate this book.