ஆல் நார்மன் எனப்படும் ஆல்பர்ட் நார்மன், அமெரிக்காவின் மஸாசுஸெட்ஸ் மாநிலத்தில் கிரீன்ஃபீல்டு எனும் சிறுநகரத்தில் மக்களைத் திரட்டிப்போராடி வால்மார்ட்டை தங்கள் நகருக்குள் வரவிடாது செய்தவர். அவர் தனது அனுபவத்தை இதில் பதிவுசெய்துள்ளார். அத்தோடு அமெரிக்காவின் பல நகரங்களில் வால்மார்ட்டால் பாதிக்கப்பட்ட நுகர்வோரான சாமானிய மக்கள், அதன் கொள்முதல் முறைகளால் பாதிப்புக்கு உள்ளான உற்பத்தியாளர்கள், வால்மார்ட்டில் குறைந்த கூலிக்கு கொத்தடிமைகள் போல பணிபுரியும் ஊழியர்கள், வால்மார்ட்டின் உயர்மட்ட அரசியல் பலம் காரணமாக வரி வசூலிப்பில் பாதிப்புக்கு உள்ளான உள்ளாட்சித் தலைவர்கள் ஆகியோரின் அனுபவங்களைத் தொகுத்து எழுதியுள்ளார். வால்மார்ட்டின் வஞ்சகமான செயல்முறைகள் அம்பலமாகின்றன.
Be the first to rate this book.