வ.வே.சு.ஐயர் பற்றிய சின்னச்சின்ன அறிமுக நூல்களை நூலகத்தில் தேடிப் படித்தபோது பல தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. ஒரு பிரயாணக் கப்பலில் "நீங்கள்தான் வ.வே.சு.ஐயரா?" என்று கேட்கப்பட்ட கேள்விக்கு மிக சாமர்த்தியமாக "இல்லை, நான் வீர்விக்ரம் சிங்" என்று தன்னை பஞ்சாபிக்காரராக துணிச்சலோடு அறிமுகப்படுத்திக் கொண்டு தப்பித்தவர் என்பது ஒரு தகவல். காந்தியைப்போலவே வழக்கறிஞர் பட்டம் பெற லண்டன் சென்று படித்துவிட்டு, பட்டமளிப்பு விழாவில் ராஜவிசுவாசப் பிரமாணம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிற விதியின் மீது விருப்பமில்லாத காரணத்தால் பட்டம் பெறாமலேயே விட்டுவிட்டார் என்பது இன்னொரு தகவல்.
வரலாறு வகுத்த பாதையில் வாழ்வது ஒருவிதம். பாதையை வகுத்து வரலாறாகவே வாழ்வது இன்னொரு விதம். வ.வே.சு.ஐயர் வரலாறாக வாழ்ந்த மாமனிதர்.
Be the first to rate this book.