ஒரு இலக்கியப் பிரதியை வாசிக்கையில், நம்முள் பலவிதமான உணர்வுகள் நிழலாடுகின்றன. அவற்றை வகைபிரித்து ஆராயவும், தொகுத்து உருவம் தரவும் நாம் முற்படும்போது அது அப்பிரதியைப் பற்றிய அறிதலாகவும், அவ் அறிதல் அதன் தர்க்கப்பூர்வமான நீட்சியில் விமர்சனமாகவும் ஆகிறது. அவ்வகையில் கே.என். செந்தில் தன்னைப் பாதித்த முன்னோடிகள் குறித்தும், தான் வாசித்த நாவல், சிறுகதை, கவிதை மற்றும் கட்டுரை நூல்கள் பற்றியும், தனது மதிப்பீடுகளை முன்வைத்து எழுதிய விரிவான கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இக்கட்டுரைகளினூடாக வெளிப்படும் அவருடைய வாசிப்பின் தீவிரமும் பார்வையின் நுட்பமும் கருத்துகளின் துல்லியமும் அவரைக் குறித்து அதிக நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் கொள்ளச்செய்கின்றன.
Be the first to rate this book.