இது இலண்டன் பல்கலைக் கழகத்தில் இந்திய வரலாற்றுப் பேராசிரியராகக் கடமையாற்றிய ஏ. எல். பசாம் என்பவரது தி வொண்டர் தட் வாஸ் இந்தியா எனும் நூலின் மொழிபெயர்ப்பு. பண்டைய இந்தியா, அதன் பண்பாடு, அரசு, சமூகம், வரலாறு, அன்றாட வாழ்க்கை, சமயம், கலைகள், மொழியும் இலக்கியமும் எனும் பிரிவுகளில் நூலின் பாதை செல்கின்றது. அண்டவியலும் புவியியலும், வானியல், பஞ்சாங்கம், கணிதவியல், பௌதீகவியலும் இரசாயனவியலும், யாப்பு, நெடுங்கணக்கும் அதன் ஒலிப்பு முறையும் முதலான இந்தியர்களின் அறிவியற் புலமை பற்றியதாக பின்னிணைப்பு அமைகின்றது. முதலாம் பாகத்தில் பண்டைய கால இந்தியா முதலாக முசுலிம்களின் வருகை வரையான தகவல்கள் உள்ளன. இரண்டாம் பாகம் 1200-1700 வரையான ஆண்டு கால வரலாற்றை உள்ளடக்கியுள்ளது.
Be the first to rate this book.