விவிலியம் கதைகளின் சுரங்கள். நவீன சிறுகதைகளின் கூறுகளையும், வரலாற்றுக் கதை வடிவங்களையும் பழைய ஏற்பாட்டுக் கதைகள் தன்னகத்தே கொண்டுள்ளன. ஆன்மிக நோக்கத்தில் வாசிப்பவர்களுக்கு இவை கடவுளின் மனிதர்கள் உலகிற்குச் சொன்ன உன்னத உண்மைகள்! சமூக நோக்கத்தில் வாசிப்பவர்களுக்கு இவை மனித நேய சமூகத்தைக் கட்டியெழுப்ப கடவுள் சொன்ன கதைகள்! இலக்கிய நோக்கத்தில் வாசிப்பவர்களுக்கு இவை நவீனத்தையும், தொன்மத்தையும் இழுத்துக் கட்டிய இலக்கியப் புதையல்! இந்த நூல் விவிலியக் கதைகளை சிறுகதை வடிவில் தருகிறது. நிகழ்வுகளின் அடிப்படையை சிதைக்காமல், அவை பேசுகின்ற வாழ்வியல் போதனைகளை மாற்றாமல், அனைத்தையும் பரபரப்பான கதைகளாக்கியிருக்கிறார் நூலின் ஆசிரியர். ஹீரோக்களாய் மாறிப் போன வில்லன்கள், வில்லன்களாய் மாறிப் போன ஹீரோக்கள், ஆறறிவுக்கு புத்தி சொல்லும் ஐந்தறிவுகள், இறைவனின் கரங்களில் சதுரங்கம் ஆடும் வியப்பின் நிகழ்வுகள் என இந்த நூல் வாசிப்பவர்களை பரவசப்படுத்தத் தவறுவதில்லை. வாசியுங்கள், நேசியுங்கள்.
Be the first to rate this book.