மக்களிடமிருந்து விலகிச் செல்வதற்காக அல்ல, மக்களிடம் மேலும் நெருங்குவதற்காக துறவறம் மேற்கொண்டவர் விவேகானந்தர்.
'எல்லையில்லாமல் அன்பு செலுத்து. எந்த நிலையிலும், ஒழுக்கத்தை விட்டுக்கொடுக்காதே. தேசத்தை மறந்துவிடாதே!' - விவேகானந்தர் போதித்தது இதைத்தான்.
மதம் என்பது மக்களைப் பிரிக்க அல்ல, மக்களை இணைக்கப் பயன்படுத்தப்படவேண்டும் என்று விவேகானந்தர் விரும்பினார். அதைத்தான் தன் வாழ்நாள் முழுவதும் திரும்பத் திரும்ப போதித்தார்.
எதை உபதேசித்தாரோ அதன்படியே வாழ்ந்து காட்டிய மாமனிதர் அவர். அதனால்தான், அந்நிய தேசத்தில் நின்றுகொண்டு அரங்கமே அதிர, அனைவரையும் 'சகோதரர்களே, சகோதரிகளே!' என்று அவரால் அழைக்க முடிந்தது.
Be the first to rate this book.