இந்தியாவின் உயிர், கிராமங்களில் இருக்கிறது. கிராமங்களின் உயிர், விவசாயத்தில் இருக்கிறது. நமக்கு மேலோட்டமாக மட்டுமே தெரிந்த விவசாயத்தை, அதன் அடிப்படையிலிருந்து ஆரம்பித்து, அழகாகச் சொல்லித் தருகிறது இந்நூல். நம்மை வாழவைக்கும் கலையை நாமும் கற்கலாமே. அரிசியை எந்த மிஷினில் செய்வார்கள். இன்றையத் தலைமுறையினர் இப்படித்தான் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். விவசாயம் பற்றிய அடிப்படை அறிவை இளைய தலைமுறையினரிடம் விதைக்கும் முயற்சியே இந்தப்புத்தகம்,. தாவரம் என்றால் என்ன அது எப்படி வளருகிறது, வாழுகிறது, எந்தெந்த மண்ணில் என்னென்ன தாவரங்கள் வளரும் என்பது போன்ற பாடப்புத்தக விஷயங்களை படு சுவாரசியமான கதை வடிவிலும் புரிந்து கொள்ளலாம். நவீன விவசாயத்தில் உள்ள ஆபத்துகளை எல்லாம் தெளிவாகப் பட்டியலிடும் அதே சமயத்தில் , இயற்கை விவசாயத்தால் ஏற்படும் நன்மைகளை விரிவாக விளக்குகிறது இந்நூல்.
- ஊரோடி வீரகுமார்.
Be the first to rate this book.